விலை சரிவில் தங்கம், வெள்ளி- எப்போது வாங்கினால் அதிக லாபம் தெரியுமா?
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்தியாவில் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் நடுத்தர அளவு வாழ்க்கை வாழும் மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகுகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியை பாரம்பரியமாக பார்க்கும் தமிழ் மக்களும் இது பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.
நிபுணர்களின் கூற்றின்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு குறிப்பிட்ட நாட்களுக்கு மாத்திரமே இருக்கும். விரைவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறைவு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க எது சரியான நேரம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

சரியான நேரம்
தங்கம் விலை ரூ.77,701 ஆகவும், வெள்ளி விலை ரூ.77,450 ஆகவும் குறையும் வாய்ப்பு உள்ளது என Pace360இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை உலகளாவிய மூலோபாய நிபுணர் அமித் கோயல் கணிப்பாக கூறியுள்ளார்.
கோயலின் கூறியது போன்று தங்கத்தின் விலை 30 முதல் 35% வரை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் கொடுக்கும். அதே சமயம், தங்கம் விலை ரூ.77,701 ஆக குறையும் என்றும் கூறியுள்ளார். தங்கத்தை போன்று வெள்ளியின் விலை மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.

50% குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ.77,450 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தற்போது நிலவி வரும் ஏற்ற இறங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தங்கம் வாங்க சரியான நேரம் என்ன பலருக்கும் தெரியாமல் இருக்கும் தங்கத்தின் விலை $2,600 முதல் $2,700 வரை குறைந்தால், அது மீண்டும் ஒரு பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீட்டு விருப்பமாக இருக்கும்.
இந்த சமயத்தில் வெள்ளி வாங்குபவர்கள் எச்சரிக்கை இருக்க வேண்டும். ஏனெனின் உலக அளவில் மந்த நிலை ஏற்படும். அப்போது வெள்ளி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது எனக் கூறப்படுகிறது. வெள்ளி 37% அதிக வருமானத்தை தரும் என்றாலும் நாளடைவில் குறையலாம்.

கடந்த 10 மாதங்களில் வெள்ளி விலையானது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் தங்க விலை 37% அதிக வருமானத்தை விற்பனையாளர்களுக்கு கொடுத்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |