Today Gold Rate:மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை..அதிர்ச்சியில் பாமர மக்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 14,730 ஆகவும் சவரன், ரூ.1,17,840 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, 14,780 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து, 1,18,240 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 295.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,95,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,91,120 அதுவே கிராமிற்கு ரூ.48,890க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,58,560க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 44,820க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 753.79 LKR என்றும் ஒரு அவுன்ஸ 23,445.56 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |