Today Gold Price: நீண்ட நாளுக்கு பின் மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை..இன்று எந்த மாற்றமும் இல்லை.
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக அதிகரித்த நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகின்றது.
நேற்றைய தினத்தில் கிராம் ரூ. 14,750 ஆகவும், சவரன், ரூ.1,18,000 ஆகவும் இருந்து வந்தது. இன்றும் கிராமுக்கு 14,750 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,18,000 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, அடுத்து வரும் நாட்களில் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 300.00ஆகவும், கிலோவிற்கு ரூ.3,00,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தங்கம்விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 3,85,280 அதுவே கிராமிற்கு ரூ.48,160 க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,53,200க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 44,150க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 745.64 LKR என்றும் ஒரு அவுன்ஸ 23,192.10 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |