வருடத்தின் கடைசி நாளில் தங்கத்தின் விலையில் நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது வருடத்தின் இறுதி நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு முழுவதுமே தங்கம் விலை பல மாற்றத்தை கண்டது. அதுவும் இந்த ஆண்டில் தங்கத்தின் விலை நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது.
அந்த வகையில் வருட கடைசி நாட்களில் தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் தற்போது மக்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக 6 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு

ரூ. 420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.10,470க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.83,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.258க்கும், ஒரு கிலோ ரூ.2,58,000க்கும் விற்பனையாகிறது.
இன்று மாலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,480க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |