தங்கம் விலையின் தொடர் சரிவு! வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும் தெரியுமா?
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வந்தாலும், சில நாட்களாகவே மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. மேற்கொண்டு தங்கம் வாங்குவது சரியா தவறா என தெரிந்துகொள்வோம்.
அக்டோபர் மாத நிலவரப்படி 10 கிராமுக்கு 49,399 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 6 மாத குறைந்தபட்ச விலை 49,250 ரூபாயாகும். இந்திய சந்தையில் 10 கிரா முக்கு 48,800 ரூபாயாகவும், அடுத்த தாக 47,700 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையா னது அதிகரிக்கலா ம் என நிபுணர்கள் கணித்துள்ள னர். உலகள அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பணவீக்கம் பற்றிய கவலையும் இருந்து வருகின்றது.

மேற்கொண்டு தங்கம் விலையையும் ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. அனைத்திற்கும் மேலாக தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் டாலருக்கு எதிராக 81.25 ரூபாயாக சரிவினைக் கண்டது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம்.
அதிலும், பண்டிகை கால பருவத்தில் தங்கத்த்ன் தேவையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. டாலரின் மதிப்பானது ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்திய சந்தையில் 48,800 மற்றும் 47,700 ரூபாய் என்ற லெவலையும் எட்டலாம் என கணித்துள்ளனர்.
இதற்கு ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், சர்வதேச அளவில் நிலவி வரும் பல அரசியல் பதற்றங்கள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.