தங்கம் விலையில் அதிரடி மாற்றம்- இன்றைய விலை விபரம் என்ன?
தங்கம் விலையில், அன்றாடம் விலை மாற்றம் இருக்கும். குறைவான விலையை விட உயர்வு விலை அதிகமாகவே இருக்கும்.
கடந்த இரண்டு நாட்களாக சரிந்த தங்கம் விலை 2வது நாளாக விலை உயர்ந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.200க்கு மேல் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.
மேலும், அமெரி்க்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேப்போல், வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா அதிகரித்து, ரூ.61.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது