10 வருஷம் ஆனாலும் தங்க நகைகள் புதுசு போல ஜொலிக்கணுமா?
பொதுவாகவே பெண்களுக்கு தங்க நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்த தங்கத்தின் பொலிவையும் தன்மையையும் பராமரிக்க சிலர் அதிகம் முயற்சிப்பார்கள்.
நாம் உபயோகிக்கும் க்ரீம்கள், வாசனைத் திரவியங்கள், மொய்ஸ்சுரைசர்கள் போன்றவையும் தங்கம் அதன் பொலிவை இழக்க காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் தங்க நகைகளை பொலிவுறச் செய்ய கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே செய்து விடலாம்.
எவ்வாறு வீட்டிலேயே சுத்தம் செய்யலாம் எனப் பார்ப்போம்...
பெரிய பாத்திரமொன்றில் இளஞ்சூடான நீரை ஊற்றி, இதில் துணி துவைக்கும் சலவைத்தூளை ஒரு மேசைக்கரண்டி கலக்க வேண்டும்.
இதில் தங்க நகைகள் அனைத்தும் நீரில் மூழ்கியிருக்கும் வண்ணம் ஊற வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து ப்ரஷ் கொண்டு நகைகளின் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்யவும்.
நகைகளை சுத்தமாக்க ஷெம்பூவும் பயன்படுத்தலாம். கழுவிய நகைகளை பருத்தி துணி மீது உலர வைக்கவும்.
இவ்வாறு செய்தால் நகைகளின் பொலிவை பாதுகாக்கலாம்.
நகைகளை திறந்தவெளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.