அங்கும் இங்கும் தங்கம் கிடக்கும் அதிசய நகரம் எங்கு உள்ளது தெரியுமா?
பல நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுவது தங்க உலோகத்தின் விற்பனையாகும். இந்த தங்கத்தை பல பெறுமதிக்கணக்கில் பணம் கொடுத்து மக்கள் வாங்குகின்றனர்.
தங்கத்தின் உயர்வு இப்படி இருக்க இந்த உலோகத்தை அதிகம் கொண்ட நாடு ஒன்று உள்ளது. அது எங்கே உள்ளது? இது உருவானதிற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
லா ரின்கோனாடா
அமெரிக்காவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தில் சுரங்கப்பாதையில் ஏராளக்கணக்கில் தங்க உலோகங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இது உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது இதன் உயரம் 5,500 மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இந்த காரணத்திற்காக ரின்கோனாடா விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
இந்த நாட்டில் அதிகமாக குளிர் காணப்படுவதால் சாதாரண மக்களால் இங்கு வாழ முடியாது என கூறப்படுகிறது. இங்கு இருக்கும் மக்கள் தொகை 60 ஆயிரம் எனப்படுகிறது. இந்த நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன.
சட்டப்படி, இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை. இங்குள்ள பொருளாதாரம் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.
ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். பெண்கள் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர். இந்த சுரங்கத்திற்கு மேலே தான் இவர்கள் வீடு கட்டி வாழ்கின்றனர்.