திடீரென சரிந்த தங்கம் விலை! இனி ரூ.100 வாங்கமுடியுமாம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்; எப்படி வாங்கலாம்?
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தாலும், ஒரு சில நாட்களில் அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது. இதையடுத்து, மாலையில் சிறிதளவு விலை குறைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று காலையிலும் விலைச் சரிவு நீடிக்கிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,350.00 என விற்பனையாகிறது.
அதே போல், சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.34,800 என விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,504 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,323 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,560 ஆகவும், ஒசூரில் ரூ.4,362 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,361 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை நேற்று ரூ.64.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நகை வியாபாரிகள் குறைந்தபட்சமாக ரூ.100 தங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers) போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் 100 ரூபாயிலேயே தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்புகள் வழங்குகின்றன.
அதுமட்டுமின்றி PC Jewelers, Senco Gold & Diamonds போன்ற நிறுவனங்களும் 100 ரூபாயில் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த பண்டிகை சீசனில் தங்கத்துக்கான டிமாண்ட் தாறுமாறாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, டிஜிட்டல் வழியாகவும் தங்கத்தை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.
மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் ஆப்களின் வாயிலான ஆன்லைனிலும் தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Phonepe போன்ற ஆப்கள் மூலம் குறைந்த விலையில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். தேவைப்படும்போது இந்த தங்கத்தை நேரடியாக வீட்டுக்கே டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும்.