காதலியிடம் சிக்கித் தவிக்கும் காதலன்: கடவுள் சிவபெருமானுக்கு எழுதிய கடிதம் வைரல்
பொதுவாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது மனதில் இருக்கும் பல குறைகள், தேவைகளை எல்லாம் கடவுளிடம் கூறி, வேண்டிக் கொள்வார்கள். இங்கு இளைஞர் ஒருவர் தனது காதலி தன்னுடன் பேச வேண்டும் என்று கடவுள் சிவனுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பாக பேசப்படுகின்றது.
அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள கிபி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் கடிதம் எழுதி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் விலாசம் குறிப்பிடாமலேயே இவரது கடிதம் வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் அனுப்பிய கடிதத்தின் முன்பகுதியில் 'தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் அதே கடிதத்தில் 'அம்மை அப்பா சரணம், மதுரை நாடார் பெண் அனுஷாவை என்னுடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள். இப்படிக்கு வெங்கடேசன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வினோத கடிதம் கோவில் நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியதோடு, குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வெங்கடேசன் என்று பெயர் மட்டும் தெரிவித்திருக்கும் அந்த முகம்தெரியாத நபர் யார்? எங்கு இருக்கிறார்? என்ற கேள்வியில் நிர்வாகத்தினர் காணப்படுகின்றனர்.
