பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி.. பசுவின் ரியாக்ஷனைப் பாருங்க! வைரல் காணொளி
ஆட்டுக் குட்டி ஒன்று தனது தாய் இருந்தும் பசுமாட்டிடம் பால் குடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி அசோக் குமார். இவர் தனது வயலில் விவசாயம் செய்து வருவதுடன், ஆடு மாடுகளையும் வளர்த்து வருகின்றார்.
தான் வளர்த்து வரும் கால்நடைகள் மீது அதிக அன்புடன் இருக்கும் அசோக் குமாரின் ஆடு ஒன்று 3 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டியானது தனது தாய் இருந்தும் பசுவிடம் சென்று பால் அருந்தியுள்ளது.
இந்த ஆச்சரியமான காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குறித்த பசுவும் ஆட்டுக்குட்டிக்கு நன்றாகவே ஆதரவு கொடுத்துள்ளது.
Goat drunk milk from cow #Cow | #GOAT? pic.twitter.com/jpBPdokSJ8
— Uvaram P (@Uvapurush) December 6, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |