டீ குடிக்கும்போது க்ளாஸை விழுங்கிட்டேன்.. முதியவரின் செயலை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்
முதியவர் ஒருவர் டீ குடிக்கும்போது கிளாஸையும் சேர்ந்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த 55 முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியாலும், மலச்சிக்கலாலும் அவதிப்படுவதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்த பார்த்த மருத்துவர்கள் வயிற்றி ஏதோ பெரிய பொருள் அடைத்துக் கொண்டு ஒன்று இருப்பது கண்டுபிடித்துள்ளனர். அதன்பின்னர் எஸ்ட்டோஸ்கோபி மூலம் வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அது முடியவில்லை. இதனால், அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க உள்ளே பார்த்தப்போது ஒரு டம்ளர் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது பற்றி அந்த முதியவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் எப்படி அந்த டம்ளர் முதியவரின் வயிற்றுக்குள் சென்றது என விசாரித்தனர். அதற்கு பதிலளித்த அந்த முதியவர் ஒரு நாள் டீ குடிக்கும்போது டம்ளரை அந்த முதியவர் விழுங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் கூறியதில் உண்மை இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஏனென்றால், உணவுக்குழாய் சிறியது. அதில் டம்ளர் போன்ற பெரிய பொருட்கள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பேயில்லை என மறுத்துள்ளனர்.
எப்படி கேட்டாலும் முதியவர் அதே பதிலை தான் கூறுகிறாராம்.
எனவே மருத்துவர்களின் கூற்றுப்படி அவர் ஆசனவாய் வழியாக தான் இதை செலுத்தியிருக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் ஏன் இப்படி செய்தார் என்பதற்கு விளக்கம் தெரியவில்லை...