முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த இலையின் நீர் குடிங்க
இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சக்கரசர்த்தி கீரை
சருமத்தின் அழகை தக்க வைகடக அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர்.
நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும்.
இதற்காக கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். அந்த வகையில் இயற்கையில் காணப்படும் சக்கரவர்த்தி கீரையில் பல சத்துக்கள் உள்ளன.
இதை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் போது அது நமக்கு பல வழிகளில் நன்தைகளை கொடுக்கும். இந்த இலையில் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
இந்த சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடன்கள் தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது.
எனவே “இந்த சக்கரவர்த்தி இலைகளை சரும அழகிற்கு நாம் எப்படி உணவாக எடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்த தண்ணீரை ஆறவைத்து பிறகு குடிக்கவும். இந்த நீரில் எலுமிச்சை சாறு தேன் சேர்த்து தினமும் காலையில் பருகி வந்தால் சருமம் கண்ணாடி போல ஜொலிக்கும். இதை வாரத்தில் நான்கு முறை செய்தால் சிறந்த பெறுபேறு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |