இரவில் படுக்கும் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க! பல மாற்றங்கள் நிகழும்
இரவில் தூங்கும் முன்பு தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மனிதர்களாகிய நாம் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக தண்ணீர் இருக்கின்றது. நாள் ஒன்றிற்கு போதுமான அளவு தண்ணீரை கட்டாயம் பருக வேண்டும்.
அவ்வாறு சரியான அளவில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாகவே காணப்படுவோம்.
எனவே உடலில் உள்ள நீரின் அளவு ஒரு போதும் குறைய கூடாது. பகலில் மட்டுமின்றி இரவில் படுக்க செல்லும் முன்பு ஒரு டம்ளர் நீரை குடித்தால் பல நன்மைகள் கிடைக்குமாம்.
நன்மைகள் என்ன?
தூங்கும் முன்பு தண்ணீர் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனையும் அதிகரிக்கின்றது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனை வராமல் தடுக்கின்றது.
இரவு நேரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு தூங்க செல்வது வளர்சிதை மாற்றத்தினை துரிதப்படுத்துவதுடன், பல நன்மைகளையும் அளிக்கின்றது.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இந்த பழக்கம் உதவுகின்றது. அதாவது சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றது.
முழங்கால் மூட்டுவலி பிரச்சனையையும் இந்த பழக்கம் சரி செய்கின்றது. அப்பகுதியில் இருக்கும் வலியை குறைத்து, சீராக புதிய நாளை தொடங்க உதவியாக இருக்கின்றது. ஆதலால் முழங்கால் வழியால் அவதிப்படுபவர்கள் இரவில் கண்டிப்பாக தண்ணீர் பருகவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |