viral video: தாகத்தில் தவித்த ராஜ நாகம்... அருகில் சென்று அசால்ட்டாக தண்ணீர் கொடுத்த நபர்!
நபரொருவர் தாகத்தில் தவித்த ராஜ நாகத்தின் அருகில் சென்று அசால்ட்டாக தண்ணீர் கொடுக்கும் மிரள வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களை அச்சுறுத்தும் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும், மனிதர்கள் பெரிதும் அச்சம் கொள்வது பாம்புகளை பார்த்து தான்.
பாம்புகள் மீதான பயம் மக்கள் மத்தியில் தொன்று தொட்டு காணப்படுவதற்கு, பாம்புகள் பற்றிய புராண கதைகளும், திரைப்டங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தின் அருகில் எந்த பாதுபாப்பு கவசமும் இல்லாமல் சென்று நபரொருவர் அதன் தாகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
