குழந்தை வரம் கொடுக்கும் திருவண்ணாமலை கம்பத்து முருகன்... இந்த தலத்தின் சிறப்பு பற்றி தெரியுமா?
திருவண்ணாமலை தலத்தில் முதல் சன்னதியாக முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது.
வேண்டும் வரம் கொடுக்கும் மலை திருவண்ணாமலை என இந்த தலத்துக்கு ஒரு சிறப்பு காணப்படுகின்றது.தலத்தின் சிறப்பு என்னவென்றால் இங்கு வீற்றிருக்கும் முருகன் கம்பத்து முருகன் என அழைக்கப்படுகின்றார். தூணில் இருந்து வெளிப்பட்டதால் இந்த பெயர் வந்துள்ளது.
இங்கு வீற்றிருக்கும் முருகன் குழந்தை முருகனாக இருப்பதால் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் கிடைத்தால் கரும்பு தொட்டில் கட்டுவதாக பக்தர்கள் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
திருவண்ணாமலை தலத்தின் சிறப்பம்சங்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |