இப்படியும் கண்ணுக்கு மை போடலாமா? ரயில் பயணிகளை மிரள விட்ட சிறுமிகள்
ரயில் பயணத்தின் பொழுது பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் சிறுமிகள் இருவர் கண்களுக்கு மை போட்டியிருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இப்படியும் போடலாமா?
எமது சமூகத்தில் கலாச்சார சீரழிவு காரணமாக சிறுவர்கள் மேக்கப் போடுவது, ரீல்ஸ் போடுவது போன்றவற்றில் அதிகமான ஈடுபாடுகள் காட்டி வருகிறார்கள்.
சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் சிறுவயதில் சிறுவர்கள் இது போன்ற வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி, நேரம், ஆரோக்கியம் ஆகியன பாதிக்கப்படுகின்றன என்பதை பலரும் அறிவதில்லை.
அந்த வகையில் சுமாராக 4ல் இருந்து 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் உறவினர்களுடன் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் இரண்டு சிறுமிகளும் கண்களுக்கு மை போட்டியிருந்த விதம் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களை நகைக்க வைத்துள்ளது. ஏனெனின் கண்களுக்கு மை போடாமல் அவர்கள் கண்களுக்கு கீழ் மை போட்டியிருந்தார்கள்.
இதனை பார்க்கும் பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறது. இது போன்று சிறுவர்கள் கண்களுக்கு மை போடுவதால் பல விதமான பாதிப்புக்கள் வரலாம். அப்படி என்னென்ன பாதிப்புக்கள் வரும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மையால் வரும் வினை
1. கண் இமைகளின் விளிம்பில் மை போடும் பொழுது அங்கு ஒருவிதமான எண்ணெய் சுரக்கும் சுரப்பிகளின் துளைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் கண்களில் கட்டி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

2. மையில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் கண்களில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். இது உங்கள் கண்களின் அழகையே வீணாக்கி விடலாம்.
3. கார்னியல் அல்சர் என அழைக்கப்படும் கருவிழியில் புண்களை ஏற்படுத்தி விடும். இதனால் தான் சிறுமிகள் அல்லது குழந்தைகளுக்கு மை போட வேண்டாம் என பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

4. அழகாக இருக்கும் கண்களில் மை போடும் பொழுது கொடுக்கப்படும் அழுத்தம், அவர்களுக்கு கடைசி வரை இருக்கும். இதனால் கண்களின் வடிவம் பாதிக்கப்படலாம்.
5. ஒவ்வாமை மற்றும் மை தொடர்ந்து பாவிக்கும் சமயத்தில் பார்வையில் கூட பிரச்சினை வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |