பிறந்தநாள் பார்ட்டியில் சிறுமிக்கு கூல்ட்ரிங்ஸில் மயக்கமருந்து: 20 வயது இளைஞரிடம் துடிதுடித்த கொடுமை
தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 17 வயது சிறுமி 20 வயது இளைஞரால் துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளான 17 வயது சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டதிற்காக தனது நண்பரான ஸ்வீட்டோஸ் (20) என்பவருடன் நேற்று முன் தினம் கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் சென்றுள்ளார்.
அன்று இரவு கொண்டாட்டத்தின் போது ஸ்வீட்டோஸ் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கிக் குடிக்க கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரவு சுயநினைவின்றி தள்ளாடிய சிறுமியை ஸ்வீட்டோஸ் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்ததோடு, அவரை வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சிறுமி எழுந்து பார்த்தபோது ரிசார்டில் அவர் மட்டும் தனித்து விடப்பட்டதையும், தான் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதையும் உணர்ந்து வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய், சிறுமியுடன் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தன் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ள நிலையில், பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்.