Viral Video: பாம்பிடம் அடுத்தடுத்து கடி வாங்கிய பெண்... புல்லரிக்க வைக்கும் காட்சி
பெண் ஒருவர் சிறிய பாம்பிடம் மிகவும் அசால்டாக விளையாடும் காட்சி பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பிடம் நடந்த விளையாட்டு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைத்து கடைசியில் பாம்பிடம் கடி வாங்கி துடிதுடிப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.
இங்கும் அப்படியொரு காட்சியினை தான் காண போகின்றோம். பெண் ஒருவர் சிறிய பாம்பை வைத்துக் கொண்டு அதனை படாதபாடு படுத்தியுள்ளார்.
குறித்த பாம்பு அப்பெண்ணை இரண்டு முறை கடிக்கவும் செய்துள்ளது. ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர் இவ்வாறு விளையாடியது பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |