ஆன்லைனில் பார்த்த நூடுல்ஸ் விளம்பரம்! சாப்பிட்ட சிறுமி பரிதாப உயிரிழப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூடுல்ஸ்
வீட்டிற்குள் இருந்தே கருவேப்பிலை முதல் கார்களை வாங்குவது வரை இன்றைய நாளிலை சாத்தியமாகவிட்டது. அப்படித்தான் மொபைல் போனில் காட்டப்படும் உணவுவகைகளை பார்த்து ரசிப்பது மட்டுமில்லை இதனை சாப்பிட ஆசைப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பெரும்பாலான மக்கள் துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் நிலையில், இதனால் பல உடல்நல பிரச்சனையையும் சந்திக்கின்றனர்.
அதிலும் நூடுல்ஸ் போன்ற உணவுகளுக்கு அதிகமாகவே அடிமையாகி வருகின்றனர். திருச்சியில் பள்ளி மாணவி ஒருவர் மொபைல் போனில் நூடுல்ஸ் விளம்பரத்தைப் பார்த்து, அதனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளாார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிக்கு அடுத்துள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். குறித்த மாணவி தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஆர்டர் செய்த நூடுல்ஸையும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு விட்டு இரவில் தூங்கிய மாணவியை காலையில் பெற்றோர் எழுப்பிய போது அவர் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து அரியமங்கலம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |