நீரிழிவு நோயாளி இஞ்சி டீ குடிக்கலாமா? சுவையான இஞ்சி டீ சுடச் சுட தயாரிப்பது எப்படி?
இஞ்சி டீ உலக அளவில் பலராலும் பருகப்பட்டு வரும் ஒரு ஆரோக்கியமான ஆயுர் வேத பானம்.
எடை குறைப்பு, நீரிழிவு, அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் சக்தி இஞ்சி டீக்கு உண்டு.
இஞ்சி டீ மருத்துவ குணமிக்கது மட்டும் இல்லை அழகினை மேம்படுத்தவும் உதவும்.
சரும பிரச்சனைகள் உண்டாகும் போது இஞ்சி பலவிதமான நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
இஞ்சி சாறு வலுவான ஆன்டி செப்டிக் பண்புகளை கொண்டிருப்பதால் சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
இனி இஞ்சியை ஒதுக்காமல் அடிக்கடி உணவில் சேர்த்து நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான இஞ்சி டீ போடுவது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
இஞ்சி டீ
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- பட்டை - 2 துண்டுகள்
- புதினா இலைகள் - சிறிது
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
அதில் நசுக்கிய இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பின் வடிகட்டி அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது சில உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு இஞ்சி டீயை தொடர்ந்து எடுத்து கொள்ளுங்கள்.
இதேவேளை, நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி டீ ஆரோக்கியம் தான். ஆனால் அதிகம் எடுத்து கொண்டால் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே இஞ்சி டீ மீது அதிக விருப்பம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை பருகினால் போதும்.