வெறும் வயிற்றில் இஞ்சி சாறு 1 கப் குடித்தால் என்ன நடக்கும்?
இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியில் உணவின் சுவையையும் மணத்தையும் மாற்றும் ஆற்றல் உள்ளது.
வழக்கமாக செய்யும் உணவை விட இஞ்சி சேர்க்கும் பொழுது அதன் நறுமணம் நன்றாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வாயுவை எதிர்த்துப் போராடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகளவில் உள்ள இஞ்சியை பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் சேர்த்து கொள்கிறார்கள்.
தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
அந்த வகையில், தினமும் காலையில் எழுந்தவுடன் இஞ்சி சாற்றை குடித்தால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு உதவியாக இருக்கிறது என பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி சாறு குடித்தால் என்ன பலன்?
1. மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலி ஆகிய பிரச்சினையுள்ளவர்கள் இஞ்சி சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது உங்களுக்கு வரும் குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுக்குள் வைக்கும். கீமோதெரபி மற்றும் இயக்க நோயால் ஏற்படும் குமட்டலைத் தடுப்பதிலும் இஞ்சி சாறு பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வரும் வலியையும் இஞ்சி சரிச் செய்கிறது.
2. இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கிறது. HSBC நிலைகளை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப் பெறுகிறது. இது பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, மூட்டு வலி பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
4. இஞ்சி எல்.டி.எல் அளவைக் குறைப்பதற்கும், எச்.டி.எல் அளவை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சி சாற்றை குடிக்கும் பொழுது உங்களின் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.
5. இஞ்சி சாற்றின் மிகப்பெரிய நன்மை எனப் பார்க்கும் பொழுது, என்ன செய்தாலும் சரிச் செய்ய முடியாத செரிமான பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. செரிமானப் பிரச்னைகள் இருப்பின் இஞ்சிச் சாறு சிறிது அருந்தினால் சரியாகிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
