உடல் எடையை கிடுகிடுனு குறைத்து ஜீரண சக்தியைத் தூண்டும் இஞ்சி சட்னி! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்
10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு படுக்கப்போகும் முன் இஞ்சி சாறு எடுத்து சுரசம் செய்து 10 மி.லி முதல் 30 மி.லி வரை குடிக்கும் பழக்கம் இருந்தது.
நவீன உணவுகளின் வருகையால் எமது பாரம்பரியம் குறைந்து கொண்டே போனது. எனினும், நாம் எமது பழைய பாரம்பரியங்களுக்கு மாறினால் தான் நோய் இல்லாமல் வாழ முடியும்.
நாம் தயாரிக்கும் உணவுகளில் இஞ்சியை சிறிது சேர்த்து கோடி நன்மைகளை பெற்று கொள்ளுவோம். இஞ்சி உடல் எடை குறைப்புக்கு உதவி புரிகின்றது.

அது மட்டும் இன்றி, இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. அசைவ உணவு சாப்பிட்டவுடன் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடனடியாக ஜீரணமாகிவிடும்.
இஞ்சியை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப்,
- பூண்டு - 20 பல்,
- காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
- கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
- வெல்லம் - சிறிய துண்டு,
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனை ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும். சத்தான இஞ்சி சட்னி ரெடி. இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜீரண சக்தியைத் தூண்டும்.
பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.