கால்பந்து ஜாம்பவானுக்கு காதலி கொடுத்த வெகுமான பரிசு! அசந்துப் போன நெட்டிசன்கள்
பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவிற்கு அவரின் காதலி பரிசாக காரை கொடுத்து அசத்தியுள்ளார்.
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்
உலகளாவிய ரீதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez) என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.
இவர் ஒரு பாரிய கார் பிரியர் என்று தெரிந்துக் கொண்ட அவருடைய காதலி தன்னுடைய காதலனுக்காக கிறிஸ்துமஸ் பரிசாக சுமார் ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Dawn) கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இதனை பார்த்த பின்னர் ரொனால்டோ மலைத்துப் போய் நின்றுள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ரொனால்டோ தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து ரொனால்டோவும் தனது புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் இன் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இது ரொனால்டோவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் அல்ல. ரொனால்டோ , அவர் தனது கேரேஜில் பல சுவாரஸ்யமான கார்களை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.