மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்! பதைபதைக்க வைத்த வீடியோ காட்சி
ஹாங்காங்கில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த பிரபல நடனக்குழுவை சேர்ந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிக்கொண்டிருந்த நடக் குழுவினர்
சீனாவில் மிகவும் பிரபலமான கேண்டபாப் மிரர் என்கிற நடனக்குழுவினர், ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில், கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த அரங்கில் இருந்த பிரம்மாண்ட வீடியோ ஸ்கிரீன் அறுந்து விழுந்தது.

பதைபதைக்கும் காட்சி
இதில் நடனமாடிக் கொண்டிருந்த கேண்டபாப் மிரர் நடனக்குழுவை சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது விழுந்த பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
The Moment a Giant Screen Fell on a Hong Kong Band Two of The Band Members Were Taken To The Hospital, But They Did Not Lose Consciousness pic.twitter.com/upRckqhBlt
— The 13th ١٣?Warrior (@strange16892330) July 29, 2022