எலி அளவிலான ராட்சத மர அந்துப்பூச்சி கண்டுப்பிடிப்பு! மிரள வைக்கும் புகைப்படம்
ஆஸ்திரேலிய நாட்டில் மிகப்பெரிய ராட்சத அளவிலான மர அந்துப்பூச்சி (Wood Moth) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் இந்த ராட்சத அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த பள்ளிக்கும், குழந்தைகளுக்கும் ஒரு மிகப்பெரிய பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

ஏனெனில் ராட்சத அந்துப்பூச்சியை மனிதர்களால் அரிதாக எப்போதாவது தான் காண முடியும். ஆஸ்திரேலியாவில் ஒரு பள்ளியில் புதிய வகுப்பறைகளை நிர்மாணித்த பில்டர்களால் இந்த மிகப்பெரிய அந்துப்பூச்சியை கண்டறியப்பட்டுள்ளது.
இது அளவில் மிகப் பெரியதாக இருந்ததுடன் கனமான எடையிலும் இருந்துள்ளது. மேலும் அது பறக்க சிரமப்பட்டது.

இந்த அந்துப்பூச்சி கிட்டத்தட்ட ஒரு எலியின் சைஸில்இருந்தது. தெற்கு குயின்ஸ்லாந்தின் ரெட்லேண்ட்ஸில் உள்ள மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளியில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த மாபெரும் மர அந்துப்பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ராட்சத அந்துப்பூச்சி பெண் என்றும் அதன் இனங்களில் மிகப் பெரியது மற்றும் 30 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கிறது.
வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, மாபெரும் மர அந்துப்பூச்சிகள் உலகிலேயே மிகவும் கனமானவை. அவை மனிதர்கள் கண்ணனுக்கு அரிதாகவே தென்படுகின்றன. பெரிய பூச்சிகளாக ஆன பின் சில நாட்கள் மட்டுமே இவை வாழ்கின்றன.