எதிர்நீச்சல் தொடரில் அடுத்து என்றி கொடுக்கும் முக்கிய பிரபலம்.. இவங்கள யாருன்னு தெரியுதா?
எதிர்நீச்சல் சீரியலில் கில்லி பட நடிகை என்ட்ரி கொடுக்கவிருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.
காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது மனைவிக்கு எதிராக குணசேகரன் தேர்தலில் நின்று வெற்றிப் பெறுவதற்கான வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்.
இதற்கு ஜான்சி ராணி, கதிர், ஞானம் இப்படி ஏகப்பட்ட ஆதரவு குணசேகரனுக்கு இருக்கின்றது. வழக்கம் போல் வீட்டிலுள்ள அனைத்து பெண்களின் ஆதரவும் ஈஸ்வரிக்கு தான் இருக்கின்றது.
கறமிறங்க போகும் பிரபலம் யார்?
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்குள் புது பிரபலமொன்று களமிறங்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்த பின்னணி பாடகியும், நடிகையுமான கேடி கலாவை களமிறங்கவுள்ளார்.
இவர் குருவி படத்திலும் விஜய்யின் அம்மாவாக நடித்து இருக்கிறார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
இப்படி முன்னணி பிரபலங்கள் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதால் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |