Getti Melam: கடைசியாக தன்னை பார்க்க வந்த அப்பா! மகேஷின் சுயரூபத்தை அறிந்த அஞ்சலி
கெட்டி மேளம் சீரியலில் தனது தந்தை வீட்டிற்கு வந்து சென்றதை அஞ்சலி கண்டுபிடித்துள்ள நிலையில், அவரது கொலைக்கு காரணம் மகேஷா என்ற சந்தேகத்தில் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியல் அடுத்தடுத்து பல திருப்பங்களை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறித்த சீரியலின் கதையும் மிகவும் விறுவிறுப்பாக செல்வதால் மக்களும் அதிகம் விரும்பி அவதானிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இறந்து போன தந்தை சிவராமன் தன்னை பார்க்க தனது வீட்டிற்கு கடைசியாக வந்துள்ளார் என்பதை அஞ்சலி தெரிந்து கொண்டுள்ளார்.
இதனால் அஞ்சலிக்கு தனது சைக்கோ கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அப்பாவின் கொலையில் மகேஷ் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள அஞ்சலி அடுத்த திட்டத்தை போட்டுள்ளார்.
அதாவது அப்பாவை கொலை செய்த நபரை வெற்றி கண்டுபிடித்து கட்டி வைத்துள்ளதாக மகேஷிற்கு போன் செய்து கூறியுள்ளார்.
அஞ்சலியின் பேச்சைக் கேட்ட மகேஷ் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார். அஞ்சலியின் திட்டம் மகேஷ் விடயத்தில் பலிக்குமா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
