நல்ல மாப்பிள்ளை வேணுமா? அப்போ இந்த குணாதிசயங்கள் அந்த பையனுக்கு இருக்காணு பாருங்க
பொதுவாக திருமணம் என வரும் போது சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெண்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அதிலும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை நல்ல வேலை, சொத்து, ஆளுமை, அன்பாக பழகுபவர் என ஆராய்ந்து விட்டு தான் திருமணம் செய்து வைப்பார்கள்.
முற்காலத்தில் உள்ளவர்கள் ஒரு வரன் வந்தால் அவரிடம் பணம், சொத்துக்கள் இருப்பதை தாண்டி புத்திசாலித்தனம் மற்றும் வலிமையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
சாமுத்திரிகா சாஸ்திரம், திருமணம் செய்வதற்கு சில குணங்கள் இருந்தால் மட்டுமே போதுமானது என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையாக வருபவர் குறிப்பிட்ட ஒரு சில பண்புகளை கொண்டிருந்தால் உங்களின் வாழ்க்கை சிறக்கும்.
அந்த வகையில், திருமணத்திற்கு முன்னர் இந்த குணங்கள் மாப்பிள்ளையிடம் இருக்கிறதா? என்பதனை ஆராய்ந்து பாருங்கள். அப்படியான குணங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உங்கள் துணையிடம் இந்த பண்புகள் உள்ளதா?
1. பையன்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். என்ன பிரச்சினை வந்தாலும் எப்பொழுதும் சிங்கம் போல் தைரியத்துடன் அதனை எதிர்த்து நிற்க வேண்டும். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி பிரச்சினை என்று வரும் போது முகங் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
2. ஆண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்கள் அவர்களின் வாழ்க்கை துணை விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இது சந்தேக நோக்கமாக இல்லாமல் அன்பாக இருந்தால் இன்னும் வாழ்க்கை சிறக்கும்.
3. ஆண்கள் வீடுகளில் அதிகாலையில் எழுந்து பழக வேண்டும். இந்த பழக்கம் ஆண் பிள்ளைகளுக்கு குழந்தை முதல் கொண்டு வரவேண்டும். இதனால் ஆண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
4. சிலர் கடினமான பணி என்று வரும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எவ்வளவு பணம் இருந்தால் அதனை நிலைநிறுத்துவதற்கு கண்டிப்பாக உழைக்க வேண்டும்.
5. ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பிறந்தால் அவர்கள் கண்டிப்பாக மற்றவர்களை மதித்து பழக வேண்டும். பிறருக்கு உதவும் குணம் உங்களிடம் இருக்க வேண்டும். உழைப்பு கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கான வெற்றியை பெற்று தரும். ஆகையால் கணக்கு பார்க்காமல் உதவலாம்.
6. ஆண்கள் தங்களின் துணையின் ஆசை, விருப்பங்களை அறிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் துணையின் தீவிர காதலராக மாறுவீர்கள்.
7. சிலர் எப்போதும் வேலையை வாழ்க்கைக்குள் கொண்டு குழம்பி போய் இருப்பார்கள். ஆண்கள் எப்போதும் வேலை, வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்த்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். காதலிப்பவர்களாக இருந்தால் தவறுகளை குறைத்து கொள்வது சிறந்தது.
8. பல ஆண்கள் தங்கள் காதல் வாழ்க்கை குறித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தங்கள் காதல் வாழ்க்கையை தனிப்பட்டதாகக் கருதுவது அவசியம். இந்த குணம் ஆண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |