மாமியாருடன் சேர்ந்து வெங்காயம் விதைக்கும் வெளிநாட்டு மருமகள்! வைரல் வீடியோ
இந்திய இளைஞரை திருமணம் செய்த ஜேர்மன் பெண் ஒருவர் தனது மாமியாருடன் வயலில் வெங்காயம் நடும் வீடியோ வைரலாகிவருகிறது.
இந்திய பாரம்பரிய உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் அல்லது இந்திய உடையை எப்படி அணியவேண்டும் என்பதை வெளிநாட்டினர் கற்றுக் கொள்ளும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.
அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜேர்மன் பெண் ஒருவர் இந்திய பண்ணையில் வெங்காயம் நடுவதைக் காணலாம்.
மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் மருமகள்
இந்திய இளைஞரை மணந்த அப்பெண் வெங்காயம் விதைக்க தனது மாமியாருடன் வயலில் வேலை செய்கிறார்.
அந்த பெண்ணின் எளிமையான தோற்றத்திற்காகவும், புதிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
ஜூலி என்ற அப்பெண் தனது Namaste Julie இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளியில், அவர் ஒரு வயலில் விவசாயம் தெரிந்த உள்ளூர் பெண் போலவே குனிந்து, வெங்காயம் நடுவதற்கு நிலத்தை தயார்படுத்துகிறார்.
அப்பெண்ணின் கணவர் அர்ஜுன் பதிவு செய்த இந்த வீடியோ மிகவும் வைரலாகிவருகிறது.
ஜூலியின் மாமியாரும் அவருக்கு பின்னால் சற்று தொலைவில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பதிவில், ஜூலி தனது கணவரின் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை மிகவும் ரசிப்பதாகவும், ஏற்கனவே 1 மாதமாக தனது கணவரின் கிராமத்தில் தங்கி இருப்பதாகவும், குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், இயற்கையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காதல் திருமணம்
அர்ஜுன் மற்றும் ஜூலி இருவரும் துபாயில் சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.
இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல எதிர்ப்புகளை மீறி அர்ஜுன் ஜூலியை திருமணம் செய்துள்ளார். யூடியூப் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் இருவரும் பிரபலமான ஜோடியாக ஏராளமான பின்தொடர்பாளர்களையும், ரசிகர்களையும் கொண்டுள்ளனர்.