சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுப்பேன்.. வாட்ஸ் அப் வீடியோவை கண்டு கொந்தளித்த பெண் வேட்பாளர்!
சென்னை, பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, எதிர்வரும் சட்டமன்ற சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி, பல்லாவரம் அருகே பம்மல் ராமாபுரத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வகிறார். இதையடுத்து, இவர் கடந்த 17ம் தேதி அன்று மை இந்தியா வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்ததும், புதிய எண்ணில் இருந்த வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.
அதை ஓபன் பண்ணி பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இதன்பின்னர், பரங்கிமலை சங்கர் நகர் துணை கமிஷனரிடம் சென்று புகார் அளித்தார். அந்த புகார் கடிதத்தில், எனக்கு வீடியோக்கள் அனுப்பி மன உளைச்சலை தந்து என்னை பணி செய்ய விடாமல் செய்த அந்த நபரை மூன்று நாட்களில் பிடித்து வந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.
மேலும், போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால், நானே அந்த நபரை தூக்கிட்டு வந்து, பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுப்பேன்.
அதை அப்படியே சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று சபதமிட்டும் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனால், ஒரு பெண் வேட்பாளர் இப்படியா முகநூலில் வீடியோவை வெளியிடுவது என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.