செப்டம்பர் மாதத்தில் சவாலை சந்திக்கபோகும் அந்த 3 ராசியினர்கள் யார்?
செப்டம்பர் 2021 மாதத்தில் மிதுனம், கடகம், மீனம் ஆகிய ராசிகள் சில சங்கடமான சவால்களை சந்திக்க நேரிடுமாம். ஆனால் அதே சமயம் உங்களை சுவாரசியமான வாய்ப்புகளை நோக்கித் தள்ளலாம்.
மிதுனம்
செப்டம்பர் மாத முதல் பாதியில் சூரியன் உங்கள் ராசிக்கு 4ம் வீடான சுகம், தாயார் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களால் நம்ப முடியாத உணர்வு பூர்வமான மாதமாக இருக்கும். தேவையற்ற உணர்ச்சி வசப்படுவதால் கோபம், மன நிம்மதி குலையலாம். குறிப்பாக இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் செப்டம்பர் 27-ம் நாள் வக்ர நிலைக்கு செல்வதால் மன குழப்பத்தை விட்டு கவனமாக செயல்படுவது அவசியம்.
கடகம்
செப்டம்பர் 22-ம் தேதி துலாம் ராசியில் புதன் மாற்றம் நிகழும் போது, பல மோசமான, அதிர்ச்சி தரக்கூடிய சில கடினமான சூழல் ஏற்படலாம். உணர்ச்சிகரமான நிலையாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், செப் 27ல் புதன் வக்ர நிலை அடைவதால் சில குழப்பமான மன நிலை ஏற்படும். இருப்பினும் இந்த சில விஷயங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கு கிரகங்களின் நிலை காரணமாக, உங்கள் உறவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். நெருங்கிய உறவுகளிலிருந்து சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதே சமயம் சில ஏமாற்றங்கள் நிகழும்.
சூரியனின் பெயர்ச்சி அதாவது புரட்டாசி மாதம் தொடங்கியதும், உங்களின் பல பிரச்சினைகளிலிருந்து மீள வாய்ப்பு ஏற்படும். இருப்பினும் உங்களின் பேச்சு, செயலில் கவனமாக இருப்பதோடு, மன நிம்மதிக்கு எது தேவையோ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.