கருப்பு நிற ஆடை அணிபவர்களுக்கு இப்படியொரு குணமா? சைக்காலஜி சொல்வது இதுதான்
கருப்பு நிற ஆடையை விரும்புகிறவர்களின் குணம் மற்றும் ஆளுமை பண்புகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெரியவர்கள் கருப்பு நிற ஆடையை கடைகளில் வாங்கி வருவதில்லை. ஏனெனில் இதற்கு சாஸ்திரம் பார்க்கவும் செய்கின்றனர்.
ஆனால் இன்றைய காலத்தில் கருப்பு நிற ஆடையை பலரும் விரும்பி அணிகின்றனர். அதாவது பார்ட்டி, மீட்டிங் என போகும் போது கருப்பு நிறம் அட்டகாசமாக இருக்கும்.
கருப்பு நிற உடையை மட்டும் தேடி தேடி வாங்கும் நபர்களின் குணம் மற்றும் ஆளுமை பண்புகள் தெரியும் என்று கூறப்படுகின்றது. அதாவது அவர்களின் மனநிலையின் பிரதிபலிப்பை தெரிந்து கொள்ள முடியும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குணம் மற்றும் ஆளுமை என்ன?
கருப்பு நிற ஆடை ஒருவிதமான அமைதியை வெளிக்காட்டினாலும், கம்பீரமான அதிகாரத்தை வெளிப்படுத்தும். அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுவர். ஆதலால் தான் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் கருப்பு நிற ஆடையை அதிகமாக தெரிவு செய்கின்றனர்.
கருப்பு நிற ஆடையை எடுப்பவர்கள் எளிமையை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஆடை தெரிவு செய்யும் போது கலரை பார்த்து நேரத்தினை வீணடிக்காமலும், மனசோர்வு இவற்றினை தவிர்க்கவும் செய்கின்றது.
நாம் அணியும் ஆடையின் நிறம் நமது மனப்பான்மையை உடனே காட்டிக் கொடுக்கும் ஆனால் கருப்பு நிற ஆடை அணிபவர்கள் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் வெளியில் காட்டாமல் இருப்பதுடன், இதுவே ஒரு பாதுகாப்பு கவனம் போன்று காணப்படும்.

இவர்கள் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் உடனே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆதலால் இவர்களை புரிந்து கொள்வது மற்றவர்களுக்கு சற்று சவாலாக இருக்கும். தனித்துவம் மற்றும் ரகசியம் நிறைந்தவராக இருப்பார்கள்.
எந்தவொரு இடத்திலும் இவர்கள் சீரியஸாக செயல்படும் குணம் கொண்டவர்கள். ஆதலால் இவர்களின் உடையே நம்பகத்தன்மையையும் முதிர்ச்சியையும் அளிக்கின்றது. வாழ்க்கை மற்றும் வேலை இவற்றினை மிகவும் பொறுப்புடனும், துல்லியத்துடனும் அணுகுவார்கள்.
கருப்பு நிற ஆடை அணிபவர்கள் சமூகத்தை விட்டு விலகி இருக்கின்றனரா? என்ற கேள்வி எழும். ஆனால் தன்னை மிகவும் கம்பீரமாககவும், தனித்துவமாகவும் கட்டிக்கொள்ளவே இவர்கள் விரும்புகின்றனர்.

அறிவியல் ஆய்வு கூறுவது என்ன?
2022ல் உளவியல் நாளிதழ் ஒன்றில், ஒருவருடைய ஆளுமை திறனுக்கு அவர்கள் தெரிவு செய்யும் நிறத்திற்கு தொடர்பு இருப்பதாக ஆய்வில் கூறப்படுகின்றது.
அதே போன்று 2023-ல் Sage Journal இதழில் வெளியான ஆய்வில் , சமூக அந்தஸ்து, செயல்திறன், ஆளுமை இவற்றினை நாம் தெரிவுசெய்யும் ஆடைகள் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு அளிப்பதாக கூறப்படுகின்றது.
ஆதலால் கருப்பு நிற ஆடை அணிபவர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் தன்னை பவர்ஃபுல்லான நபராக காட்டுகின்றதாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |