பல நடிகைகளின் வாழ்கையை சீரழித்தாரா விஷால்? வெளியாகும் காயத்ரி ரகுராம் விஷாலின் அந்தரங்க விடயங்கள்
பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, காயத்ரி ரகுராம், விஷால் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாகவும் நடித்தவர் தான் காயத்ரி ரகுராம்.
இவர் பிரபல ரிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார். தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், பாஜக கட்சியில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரின் வன்கொடுமை செயலைக் கண்டித்து, பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் விஷாலும் தனது கருத்துக்களை கூறிய போது, காயத்ரி ரகுராம் குறித்த பள்ளிக்கு ஆதரவாக, விஷாலை கடுமையாக திட்டித் தீர்த்தார்.
விஷால் பல பிரபலங்களில் வாழ்க்கையினை சீரழித்ததாகக் காயத்ரி கூறிய தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் இதற்கு விஷால் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி வலைதள பேச்சு ஒன்றில் விஷாலை எதற்காக காயத்ரி ரகுராம் திட்டினார் என கேட்டதோடு, காயத்ரி ரகுராம் மற்றும் YG மகேந்திரன் குடும்பத்திற்கும் உள்ள உறவுமுறையே, குறித்த பள்ளிக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி பல அந்தரங்க விஷயங்களை வெளியிட்டார். அப்போது ஏன் காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் போன்றவர்கள் பேசவில்லை என கேட்டனர்.
அதற்கு பிஸ்மி தமிழ் திரையுலக பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் முழுவதும் ஸ்ரீரெட்டிக்கு தெரியும். அப்போது வாய் திறந்திருந்தால் காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களை வெளியாகியிருக்கும் என்பதால் தான் அவர்கள் பேசி இருக்க மாட்டார்கள் என கிண்டலடித்த படி கூறினார்.
இதனை அவதானித்த சிலர், பிஸ்மி ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தனது மனதில் பட்டதைக் கூறியுள்ள நிலையில், குறித்த தகவல் உண்மையா? பொய்யா என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்.