கேஸ் பர்னர் கருப்பாகி அழுக்கா இருக்கா? இந்த 3 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க
நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் பர்னர் கருப்பாக மாறி இருந்தால் அதை பளபளப்பாக மாற்றும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கேஸ் பர்னர்
பர்னர்கள் சுத்தமாக இருந்தால் தான், தீ சீராகப் பரவி, சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு வரும். அதில் அடைப்புகளுடன் இருந்தால், எரிவாயு விரயம் ஆவதுடன், சமையல் நேரமும் அதிகரிக்கும்.
எனவே பர்னர்களை எப்போதும் சுத்தமாக வைப்பது அவசியம். கொதிக்கும் நீர் ஒரு முழு எலுமிச்சை ஈனோ பவுடர் சோப்பு நார் துடைப்பக் குச்சி போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்யும் முறை
முதலில் கேஸ் பர்னரை கழற்றி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அந்த தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் எலுமிச்சைகளை பாதியாக நறுக்கி தண்ணீரில் பிளிந்து விட்டு பிளிந்த அந்த துண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இதில் ஈனோ பவுடரை போட்டு பொங்கி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த கலவையில் பர்னர்களை போட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பர்னர்களை போடும் போதே சல கறைகள் இல்லாமல் போவதை காணலாம். பர்னர்கள் நன்கு ஊறியதும், அதை வெளியே எடுத்து, சோப்பு நார் அல்லது இரும்பு ஸ்க்ரப் கொண்டு சுற்றிலும் நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
இப்போது சுத்தமான தண்ணீரில் அலசுங்கள். உங்கள் பர்னர்கள் புதிதுபோல் பளபளப்பை தரும்.
பர்னரின் துளைகளில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், ஒரு துடைப்பக் குச்சி அல்லது மெல்லிய கம்பியைப் பயன்படுத்தி ஒவ்வொரு துளையிலும் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த எளிய டிப்ஸை வாரம் ஒரு முறை கடைப்பிடித்தால் போதும். உங்கள் கேஸ் பர்னர்கள் எப்போதுமே புதிது போல இருக்கும்.
இப்படி பர்ணர்களை சுத்தம் செய்தால் எரிவாயு வீணாகாமல் நீண்ட நாட்களுகளுக்கு இருக்கும். இதை கறுப்பாக அழுக்காக இருக்கும் பர்ணர்களுக்கு பயன்படுத்தி பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |