பாடாய் படுத்தும் ராகு-கேது தோஷத்தையே தலைத்தெறிக்க ஓட விடனுமா? கருட பஞ்சமி அன்று இத செய்யுங்க!
கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
இந்த கருட பஞ்சமி நாளானது தோஷங்களை போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள உகந்த நாள்.
புராணங்களின் படி, கருடன் ஒருவரை அனைத்து வகையான நாக தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் சக்தியைக் கொண்டவர்.
எனவே கருட பஞ்சமி அன்று கருடணை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது. அதுவும் இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால், கருடனின் அருள் கிடைக்கும்.
கருட காயத்ரி மந்திரம்
கம்!கணபதயே! நமஹ! ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா! ஓம்! ஹாம்!
ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ!
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தன்னோ கருட பிரச்சோதயாத்
சக்திவாய்ந்த கருட மந்திரத்தின் பலன்கள்
இந்த கருட மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாகும்.
இந்த கருட மந்திரத்தை ஒருவர் சுக்ல பக்ஷத்தின் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி, தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால், அந்நபர் 12 தலைமுறைக்கான சித்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
மேலும் அனைத்து வகையான நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபட்டு, நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் ஆகியவற்றை பெறலாம்.