குப்பையில் போடும் பூண்டு தோலில் இவ்வளவு மகிமை இருக்கா?
பொதுவாக காய்கறிகள், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் தோல்கள் மற்றும் காம்புக்களை குப்பையில் தான் போடுவோம்.
ஏனெனின் அதன் ஆரோக்கிய பலன்கள் எதுவும் பெரிதாக யாருக்கும் தெரியாது.
வழக்கமாக உணவில் சேர்க்கும் பூண்டை போன்று தோலில் கூட ஆரோக்கிய பலன்கள் உள்ளன. சிலர் ரசம் வைக்கும் பொழுது பூண்டை தோலுடன் தட்டிப் போடுவார்கள்.
இப்படி தோலுடன் போடும் பொழுது மசாலா சுவை அதிகரிக்கிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், தூக்கிப் போடும் பூண்டு தோலை அப்படியே உணவுடன் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மை, தீமைகளை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

பூண்டு தோலூக்கு இப்படியொரு மகிமையா?
1. சளி, இருமல் பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் பூண்டை தோலுடன் போட்டு ரசம் வைத்து குடிக்கலாம். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் இருந்தால் குணமாகும்.
2. பட்டைக்கு சமமான பலன்களை பூண்டு தோல் தரும் என ஆய்வுவேத மருத்துவம் கூறுகிறது.

3. பூண்டை போன்று அதன் தோலும் உணவின் சுவையை அதிகப்படுத்தும். தோலை நன்றாக காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இது உணவின் சுவையை அதிகரிக்கும்.
4. வெள்ளை வினிகர், தோலுடன் இருக்கும் பூண்டு, கிராம் ஆகிய மூன்றையும் போட்டு போத்தலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். இது இறைச்சியை marinate செய்ய உதவியாக இருக்கும்.

5. நன்றாக உலர வைத்த பூண்டு கொஞ்சமாக எடுத்து குளியல் அறை, படுக்கை அறைகளில் ஓரமாக தொங்க விடுங்கள். இது உங்கள் வீட்டிலுள்ள கெட்ட வாசணையை இல்லாமல் செய்து புத்துணர்ச்சிக் கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |