கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும்
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றது.
நாம் முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
கூந்தல் சம்பந்தமான ஒட்டுமொத்த பிரச்சினைக்கு பூண்டு தீர்வு கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வெங்காயம் தீர்வு கொடுக்கும் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதை விடவும் பூண்டு சிறந்த மற்றும் விரைவான தீர்வை கொடுக்கும்.
பூண்டில் சில சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றது. இது இயற்கையாகவே கூந்தல் எதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடியை வளரச்செய்கின்றது.
மேலும் அதில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள அனைத்து முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பாக்டீரியாக்களையும் நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதனால் பொடுகு சமபந்தமான பிரச்சிகைகள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் தடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் ஒட்டு மொத்த கூந்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் பூண்டு எண்ணெய்யை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்ணெயை எப்படி தயாரிப்பது?
முதலில் பூண்டு பற்களை நசுக்கி அல்லது பேஸ்ட் செய்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அந்த பூண்டு விழுதை சேர்த்து மிதமாக தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெயை நன்றாக ஆறவிட்டு அதனை ஒரு பாட்டில் அல்லது ஜாடிக்கு மாற்றி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து குறைந்தபட்சம் 2-3 மணிநேரம் ஊறவிட்டு பின்னர் குளித்து வந்தால், கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்கி கூந்தல் வளர்ச்சிய அதிகரிக்கும்.
பூண்டு ஒவ்வாமை இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு எண்ணெயில் வைரஸ் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |