முடி வளர்ச்சியை தூண்டும் கேரளா பெண்களின் அழகு ரகசிய எண்ணெய் எப்படி செய்வது?
பூண்டு பொதுவாக சமையலுக்கு அதிகமாக பயன்படும் ஒரு பொருளாகும்.இதை அனைத்து சமையலறையிலும் பார்க்க முடியும். இது தவிர இது இயற்கை வைத்தியத்தில் பயன்படுகிறது.
இதை பற்றி யாரும் அறியாத ஒன்று இது முடி உதிர்தலுக்கு மருந்தாக உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொதுவாக வெங்காயம் முடி உதிர்வை நிறுத்தக்கூடியது.
இந்த பதிவில், முடிக்கு பூண்டின் நன்மைகள் மற்றும் உங்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்துக்களை வழங்க பூண்டு எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு எண்ணெய்
சில பூண்டு பற்களை நசுக்கவும் அல்லது அரைத்து எடுத்து கொள்ளவும். இதை ஒரு கடாயை எடுத்து போட்டு எண்ணை ஊற்றி வதக்க வேண்டும். இதற்கு ஒரு கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து வறுக்க வேண்டும்.
இதை குறைந்த தீயில் எண்ணெயை 5 நிமிடங்கள் சூடாக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும். இதை ஒரு போத்தலில் போட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும்.
இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்கும் முதல் மசாஜ் செய்து குறைந்தபட்சம் 2-3 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இந்த பூண்டில் நிறைந்துள்ளன.
பச்சை பூண்டில் வைட்டமின் பி-6 மற்றும் வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான தலை முடியை ஊக்குவிக்கின்றது.
பூண்டில் காணப்படும் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் தலை முடிக்கான நன்மைகளுக்கு பங்களிக்கக்கூடும்.
ஏனெனில் இந்த பண்புகள் பாக்டீரியாவைக் கொல்லவும், கிருமிகளை எதிர்த்துப் போராடவும், உங்கள் உச்சந்தலையையும் தலைமுடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
இந்த எண்ணெணையை தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடியில் வேர் முதல் நுனி வரை தடவுங்கள்.
குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அதை அப்படியே விட வேண்டும். இப்படி செய்தால் முடி உதிர்வு இல்லாமல் போகும். தலையில் பொடுகு தொல்லை மற்றும் பளபளப்பு அற்றுப்பொகாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |