வாரத்திற்கு 2 சென்றிமீற்றர் வேகத்தில் முடி வளரணுமா? அப்போ இந்த எண்ணைய ட்ரை பண்ணி பாருங்க
இன்றய காலகட்டத்தில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை என்பது ஒரு நோய் போல பரவிக்கொண்டு இருக்கிறது.
இதற்காக நாம் பல மருத்துவங்களை நாடி இருப்போம், அவை அனைத்தும் மனதிற்கு திருப்தி தராத வகையில் இருந்திருக்கும்.
இதற்காக பலர் பல சிகிச்சைகளைளும் மேற்கொண்டு வந்திருப்பார்கள். இவ்வாறு பல விஷயங்களை செய்து தோல்வியில் இருப்பவர்களுக்காக முடி உதிர்வை குறைக்கும் பூண்டு எண்ணைய் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு எண்ணைய்
பூண்டில் அதிகமான வைட்டமின்களும் தாதுக்களும் நிரம்பி உள்ளன. இது நமது தலைமுடிக்கும் அதன் வேர்களுக்கும் உறுதியளிப்பதற்கு மிகவும் துணைபுரிகின்றன.
இதன் காரணமாக பூண்டில் செய்த எண்ணையை நாம் தலைக்கு பயன்படுத்தும் போது அது நமது தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை போக்கவும் உதவி செய்யும்.
இதன் காரணமாக முடிவளர்ச்சி கூடும். நன்றாக பச்சைப்பூண்டை எடுத்து அதை நல்லெண்ணை மற்றும் தேங்காய் எண்ணையில் நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த எண்ணை சூடாகியதும் அதை நீங்கள் எப்பவும் தலைக்கு தேய்கும் எண்ணெய் போலவே தேய்க்கலாம், இதை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பலனை பெறலாம்.
இந்த எண்ணையை உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவில் எடுத்து அதை கொஞ்சம் சூடாக்கி பின்னர் அது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட்டால் மிவும் நல்ல பலனை பெறலாம்.
பின்னர் இதை 40 நிமிடங்கள் ஊற வைத்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசி விடலாம். நீங்கள் இப்படி வாரத்திற்கு இரண்டு தடவை செய்தால் நல்ல பயன் கிடைக்கும்.