மணக்க மணக்க சுவையான பூண்டு குழம்பு! நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு
பூண்டு குழம்பு பல வகையான மருத்துவ பயன்களைக் கொண்டது. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வயிற்றில் தேவையில்லாத கொழுப்புகளையும் கரைக்கின்றது. பூண்டு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதைக் காணலாம்.
தேவையானவை
பூண்டு - 25 பல் உரித்தது
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2 பெரியது
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் மற்றும் மல்லித்தூள் - தேவையானவை
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 50 கிராம்.

செய்முறை
வாணலி அல்லது மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்களைப் போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும். அத்துடன் அரைத்த தக்காளியைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
குழம்பு பதம் வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பறிமாறலாம்.
