பூண்டு மிளகாய் சட்னி ஒரு முறை இப்படி செய்ங்க... சுவை அட்டகாசமா இருக்கும்
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லி, தோசையாகத்தான் இருக்கும்.
இதற்கு தொட்டுக்க வழமையாக கார சட்னி செய்பவரா நீங்க? அப்போ கொஞ்சம் வித்தியாசமான முறையில் சுவையான பூண்டு கார சட்னி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 10
காஷ்மீரி வரமிளகாய் - 4
பூண்டு - 25
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
தண்ணீர் - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்த்ம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயத் தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி, 2 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், அனைவரும் விரும்பும் வகையில் மணமணக்கும் சுவையான பூண்டு கார சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |