வீட்டில் ரவை இருக்கா? அப்போ இந்த Recipe கட்டாயம் செய்து பாருங்க
மாலை தேனீருக்கு கடிச்சிக்க சட்டுன்னு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யணுமா?
ஒரு கப் ரவை இருந்தா போதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸை வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
கசூரி மெத்தி - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்கர் அதனுடன் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி நன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடேற்றி ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து சற்று தளர்வாக பிசைந்து கொண்டு, 30 நிமிடங்கள் வரையில் மூடி ஊறவிட வேண்டும்.
பின்னர் மாவை கைகளால் நன்கு பிசைந்துக்கொள்ள வேண்டும். பின்பு பிசைந்த மாவை சிறிது எடுத்து, ஒரு முட்கரண்டியின் அடிப்பகுதியில் வைத்து பரப்பி அப்படி உருட்டிக்கொள்ள வேண்டும்.
முட்கரண்டியின் அச்சானது மாவில் விழுந்து, ஒரு அழகான தோற்றத்தைத் கொடுக்கும் வகையில் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மாவையும் உருட்டி ஒரு தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு, பொன்நிறமாக பொறித்து எடுத்தால் சூப்பரான மொறு மொறு ரவை ஸ்நாக்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |