இட்லி, தோசைக்கு அருமையான சட்னி... 4 பொருளை வெச்சு செய்து பாருங்க
இந்திய உணவுகளில் காலை நேரத்தில் இட்லி, தோசை வகைகள் தான் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதற்கு விதவிதமான சட்னிகளும் செய்வார்கள்.
அந்த வகையில் இரண்டு மூன்று நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் பூண்டு மிளகாய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பூண்டு - 25 பல்
சின்ன வெங்காயம் - 25
புளி - 1 எலுமிச்சை அளவு
வரமிளகாய் - 20
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், புளி இவற்றினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் இவற்றினை சேர்த்து தாளித்து, அதனுடன் அரைத்து வைத்திருக்கும் சட்னியையும் சேர்க்கவும்.
அவ்வப்போது நல்லெண்ணெய் விட்டு நன்கு கிளறவும், ஒரு கட்டத்தில் சட்னியானது சட்டியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |