Kidney Stone: மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிட வேண்டாம்
கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு சிறுநீரகம் ஆகும்.
இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. மனிதர்களுக்கு சிறுநீரகம் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது.
இந்த சிறுநீரகத்தில் ரத்த சுத்திகரிப்பு நிகழும் நேரங்களில் சோடியம் மற்றும் கால்சியம் போன்றவை படிந்து காணப்படுகின்றது. இது நாளடைவில் சிறுநீரக வழியில் வந்து சேர்ந்து அடைத்து கொள்ளும்.
இதனால் உடலில் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த சிறுநீர்கல் பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவுப்பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவது மிகவும் முக்கியமான ஒரு காரணியாகும்.
எனவே இந்த பதிவில் சிறுநீர் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணக்கூடாத உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. சிறுநீரகத்தில் கல் பாதிப்பு உள்ளவர்கள் அதிக உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது மற்றும் அதிக மசாலா நிறைந்த உணவுகளையும் உண்ண கூடாது.
அதிக சோடியம் சிறுநீரகத்தில் படிவதால் அதிக உப்பு மசாலா உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
2.வைட்டமின் சி சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடியது. அதனால் சிறுநீரக கல் பாதிப்பை இது மேலும் அதிகரிக்ககூடும்.
எனவே நாம் உண்ணும் உணவில் வைட்டமின் சி உணவை தவிர்ப்பது நல்லது. அதாவது புளிப்பான உணவுகள் எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
3.சோயா உணவுகளில் அதிக புரதம் இருந்தாலும் சில சோயா தயாரிப்பில் ஆக்சிலேட் அதிக அளவில் இருக்கும். இது சிறுநீரகக் கற்களை உருவாக்கும் என்பதால், சோயா உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
4.முழுத்தானியங்கள் உணவாக எடுத்து கொள்ள கூடாது. காரணம் இது செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்.
இது கிட்னிக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க கூடியது. பொதுவாக இந்த சோளம், கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றை உண்ண கூடாது.
5. அசைவ உணவில் அதிக புரதச்சத்து இருப்பதால் கிட்னி கல் பாதிப்பாளர்கள் மீன், இறைச்சி, முட்டை என்பவற்றை எடுத்து கொள்ள கூடாது.
இது இந்த நோயை அதிகப்படுத்தும், இதனால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |