தூக்கி வளர்த்த மகளின் இறுதி சடங்கிற்கு கங்கை அமரன் வராதது ஏன்?
பிரபல பாடகி பவதாரணியின் இறுதி சடங்கிற்கு அவரது சித்தப்பாவும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கலந்து கொள்ளாததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பாடகி பவதாரணி
தமிழ் திரையுலகில் "ராசையா" என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் நான் பவதாரிணி. தேசிய விருது பெற்ற இந்த பாடகி மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்.
தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருடைய இசையிலேயே பெரிய அளவில் பாடல்களை பாடியுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார்.
பவதாரணியின் மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பவதாவை உறவினர்கள் வழியனுப்பினர்.
ஆனால் பவதாரணியை தூக்கி வளர்த்த சித்தப்பா கங்கை அமரன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
கங்கை அமரன் வராதது ஏன்?
இளையராஜா எப்பொழுதும் டென்ஷனாகவே இருக்கக்கூடியவர். உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் மனதை புண்படும் படியாக மனதில் உள்ளதை பட்டென்று கூறிவிடுவார்.
இவர் தனது சகோதரரான கங்கை அமரனை பலமுறை மட்டம் தட்டி பேசியும், நடத்தியும் உள்ளாராம். சினிமா வட்டாரத்தில் கூட இவருடன் மோதும் நபர்களை இவ்வாறு தான் நடத்துவாராம்.
கங்கை அமரனையும் இளையராஜா புரிந்து கொள்ளாமல் தன்னுடைய தம்பி என்றும் பாராமல் ஒரு கட்டத்தில் அடிக்காத குறையாய் அவரிடம் சண்டை போடு, திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.
இந்த கோபம் இன்னும் இருவருக்கும் இடையே சென்று கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு பிள்ளைகள் ஆசைப்பட்டதால் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்து கூறிவிட்டு சென்றுள்ளார்.
பவதாரணியால் சோகத்தில் இருக்கும் இளையராஜா, கங்கை அமரனைப் பார்த்தால் இன்னும் கோபப்படுவார் என்பதால், தான் தூக்கி வளர்த்த மகளின் இறுதி சடங்கில் கூட கங்கை அமரன் வரவில்லை என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |