விநாயகர் சதுர்த்துக்கு வித்தியாசமான பூரண் போலி எப்படி செய்யலாம் தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு 2024 செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்து மக்களிடையே கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகை விநாயகருக்க்காக கொண்டாடப்படுகிறது.
coriander chutney: வீட்டில் தேங்காய் இல்லையா? அசத்தல் சுவையில் இப்படி கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க
விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை இல்லாமல் செய்பவராக கருதப்படுகிறார். இவர் செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். எனவே தான் இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளாக குறிக்கப்படுகிறது.
இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். இதற்காக தான் இங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை.
இது விநாயகருக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு சிறப்பு உணவுகள் விநாயகருக்காக செய்யப்படுகிறது. அதில் புரான் போலியும் ஒன்று. இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு – ஒரு கப்
- சர்க்கரை அல்லது வெல்லம் – அரை கப்
- தேங்காய் துருவல் – ஒரு கப்
- ஜாதிக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
- ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
- மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்
- மைதா – 2 கப்
- கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில ஒரு பாத்திரத்தை எடுத்து மைதா, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து எடுக்க வேண்டும்.
பின்னர் இதை உருண்டை பதத்திற்கு எடுத்து நெய்விட்டு தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்துவிட வேண்டும். பின்னர் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த கடலை மசியும் அளவிற்கு வேக விட வேண்டும்.இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி நன்றாக மசித்துகொண்டு அதில் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசையவேண்டும்.
பின்னர் அதில் சிட்டிகை உப்பு, ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவேண்டும். இப்படி பிசைந்த மாவை உருண்டைகளாக்கி அதை நன்றாக தேய்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடலை பருப்பு கலவையை சிறு உருண்டையாக உருட்டி, அதன் நடுவில் வைத்து, அந்த மாவை மூடி கைகளால் அல்லது சப்பாத்தி கட்டையில் வைத்து பூரணம் வெளியே வந்துவிடாமல் தேய்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இதை தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால் பூரண் போலி தயார். இதை வைத்து விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்க படைக்கலாம். மகடகளுகடகும் பகிரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |