coriander chutney: வீட்டில் தேங்காய் இல்லையா? அசத்தல் சுவையில் இப்படி கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க
பொதுவாகவே காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்வது தான் வழக்கம். என்றாவது அல்மேட் சுவையில் ஒரு சட்னி செய்ய வேண்டும் என நினைத்தால், இந்த மல்லி சட்னியை செய்து பாருங்கள்.
இந்த பாணியில் சட்னி செய்வதற்கு தேங்காய் பயன்படுத்த தேவையில்லை. வீட்டில் தேங்காய் இல்லா த நேரங்களிலும் கூட இந்த சட்னி கைகொடுக்கும். மேலும் மல்லியில் அதிகளவில் சார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகளை தீர்பதிலும் துணைப்புரியும்.
கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
இதில் உள்ள இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லியை வைத்து அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த சட்னியை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1தே.கரண்டி
வரமிளகாய் - 3
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
உப்பு - சுவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
புளி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 1/2 கட்டு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சிறிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வத்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பெருங்காயத் தூள், புளி, பொட்டுக்கடலை ஆகியவற்றை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துஈ ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்டதை அடுப்பில் வைத்த, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் சுவையான மல்லி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |