Village Style: கிராமத்து சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்ய தெரியுமா?
நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும்.
இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.
அந்த வகையில் கிராமத்து சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சேர்த்து உண்ண முடியும்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்
- வெங்காயம் - 2
- பூண்டு - 7
- இஞ்சி
- தக்காளி 2
- உப்பு
- சீரகம்
- கறுப்பு மிளளு
- மஞ்சள்
- மிளகாய் பொடி
- துருவிய தேங்காய் - கால் கப்
- கத்தரிக்காய்
- சின்ன வெங்காயம்
- புளித்தண்ணீர்
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதக்க வேண்டும். இது பெரிய வெங்காயம் நறுக்கியதாக இருக்க வேண்டும்.
பின்னர் பூண்டு இஞ்சி தக்காளி உப்பு சீரகம் கறுப்பு மிளளு மஞ்சள் மிளகாய் பொடி துருவிய தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவைக்கு ஏற்ப கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பிஞ்சி கத்திரிக்காய் எட்டுபோல எடுத்து அதை நான்கு பக்கமும் வெட்டி அரைத்த மசாலாவை அதனுள் இட்டு கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணை ஊற்றி சின்ன வெங்காயம் கறிவேப்பிலை கடுகு சீரகம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அந்த அரைத்த மசாலாவை இந்த வதக்கிய கலவையுடன் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தேவையான அளவு உள்பும் சேர்க்க வேண்டும். பின்னர் மசாலாவில் ஊற்வைத்த கத்திரிக்காயை எண்ணையில் போட்டு பொறித்து மசாலா குழம்பில் சேர்க்க வேண்டும்.
பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி எடுத்தால் நாவில் சுவையூறும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |