Ganesh Chaturthi: உங்கள் ராசி இதுவென்றால் - விநாயகருக்கு இதை வாங்கி கொடுங்க
உங்கள் ராசிப்படி நீங்கள் இன்று விநாயகருக்கு பூஜைக்காக அல்லது பிரசாதமாக என்ன வாங்கி கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Ganesh Chaturthi
இந்து மத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் முதன்மையாக இருப்பவர் தான் விநாயகர். விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் கஷ்டங்கள் விலகும் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
இதற்காக தான் ஒரு காரியத்தை தொடங்க முன்னர் விநாயகரை வழிபட்டு விட்டு பின்னர் தொடங்குகிறார்கள். இதனால் அந்த காரியத்திற்கு இருக்கும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில் இன்று விநாயகர் பிறந்த தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் விநாயகர் தன் பக்தருக்கு நினைத்தவற்றை கொடுப்பார் என நம்பப்படுகின்றது.
இதனால் 12 ராசிகளிலும் பிறந்த நீங்கள் விநாயகருக்கு என்ன வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
12 ராசி
மேஷம் | "ஓம் வக்ரதுண்டாய ஹோம்" என்ற மந்திரத்தை சொல்லி கணபதிக்கு வெல்லம் வாங்கி கொடுக்க வேண்டும். |
ரிஷபம் | "ஓம் ஹீ கிரீன் ஹீ" என்ற மந்திரத்தை சொல்லி ஆனைமுகனுக்கு கற்கண்டு வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் பிரச்சனை குறையும். |
மிதுனம் | "ஓம் கண கணபதயே நமஹ" அல்லது "ஸ்ரீ கணேஷாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி ஐங்கரனுக்கு பாசிப்பருப்பு கற்கண்டு வாங்கி கொடுத்தால் வாழ்வில் புதிய பாதைகள் பிறக்கும். |
கடகம் | "ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகருக்கு சந்தனம் வாங்கி கொடுத்தால் கணபதியின் முழு அருளும் கிடைக்கும். |
சிம்மம் | "ஓம் சுமங்கலயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி பிள்ளையாருக்கு மோத்திசூர் லட்டு வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் தடைகள் நீங்குமாம். |
கன்னி | "ஓம் சிந்தாமன்யே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி கணபதிக்கு 21 வகையான இலைகள் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் கலலைகள் நீங்கும். |
துலாம் | ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி ஐங்கரனுக்கு தேங்காய் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பாதை பிறக்கும். |
விருச்சிகம் | "ஓம் நமோ பகவதே கஜானனய்" என்ற மந்திரத்தை சொல்லி சிவப்பு நிற மலர்களை வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். |
தனுசு | "ஓம் கண கணபதே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி மஞ்சள் நிற பூக்களையும், லட்டுக்களையும் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் பிரச்சனைகள் குறையும். |
மகரம் | "ஓம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகனுக்கு வெற்றிலை, ஏலக்காய், கிராம்பு வாங்கி கொடுத்து வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் பிறக்கும். |
கும்பம் | "ஓம் அந்திரிக்ஷாய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை சொல்லி கடலைமாவு லட்டுக்களையும், சிவப்பு மலர்களையும் வாங்கி கொடுத்தால் சோம்பல் நீங்கி வாழ்வில் நல்ல காலம் பிறக்கும். |
மீனம் | "ஓம் கண கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி குங்குமப்பூ மற்றும் தேனை வாங்கிக் கொடுத்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு வரும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).